திருப்பதி மலையில் விழுந்த சென்னை பக்தர் மீட்பு
திருமலை: சென்னையைச் சேர்ந்த பக்தர், திருப்பதிக்குச் சென்றபோது தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார். அவரை தீயணைப்புப் படையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
சென்னையை சேர்ந்த பத்மநாபன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடைபாதை வழியாக படிக்கட்டுகளில் ஏறி திருமலைக்கு சென்று கொண்டு இருந்தார்.
மலை உச்சியில் நின்று கீழே இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் வந்தது. இதனால் தலை சுற்றி 20 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார்.
அதிர்ஷ்டவசமாக அவர் விழுந்த இடத்தில் ஏராளமான மரங்கள் நிறைந்திருந்ததால் மரக் கிளைளுக்குள் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து காப்பாற்றக் கோரி அவர் குரல் கொடுத்தார். இதையடுத்து மலைப் பாதையில் போய்க் கொண்டிருந்தவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீ்ரர்கள் விரைந்து வந்து, பத்மநாபனை சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர்.
கீழே விழுந்து மரக் கிளைகளில் சிக்கியதால், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து திருப்பதி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications