தாஜ் மகாலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பேர் கைது
ஆக்ரா: தாஜ் மகாலின் பாதுகாப்பு வளையத்துக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் தப்பியோடிவிட்டனர்.
சில ஆண்டுகளாகவே தாஜ் மகாலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்று யெல்லோ ஸோன் என்றழைக்கப்படும் தாஜ் மகாலின் 500 மீட்டர் சுற்று வளையத்துக்குள் 5 பேர் வந்தனர்.
அவர்களை போலீசார் சோதனையிட்டபோது இவர்களிடம் இரண்டு பிஸ்டல்கள் இருந்தன. இதையடுத்து இருவரை அங்கிருந்த போலீசார் பிடித்தனர். மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனர்.
விசாரணையில் அவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மணிப்பூரின் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்களா என்று விசாரணை நடக்கிறது.
தாஜ் மகாலுக்குள் தாக்குதல் ஏதும் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்றும் விசாரி்க்கப்பட்டு வருகிறது.
ஆனால், இவர்கள் சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் கொள்ளைக் கும்பல் தான் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
முதல் இரு கட்ட பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இவர்கள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்ததற்கு போலீசாரின் கவனமின்மையே காரணம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications