திருமங்கலத்தில் ராதிகா போட்டியிடுவாரா?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேளச்சேரி பகுதி செயல்வீரர்கள் கூட்டம் மந்தைவெளியில் உள்ள தென்சென்னை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளச்சேரி பகுதி செயலாளர் சி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ஜே.நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட வேண்டும்.
இந்த தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதற்கான கோரிக்கை அடங்கிய மனுவை நம் மாவட்டம் சார்பில் கட்சி தலைவர் சரத்குமாரிடம் அளித்து வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து ராதிகாவை வேட்பாளராக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத்குமாரின் யோசனைப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேறியிருக்கும் என்று கருதப்படுகிறது.
சமீப காலமாக ராதிகாவை கட்சியில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும், முக்கியப் பொறுப்பு அளிக்க வேண்டும் என கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். அதை ஏற்று ராதிகாவுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று கட்சித் தலைவர் சரத்குமாரும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவில் சரத்குமாருக்குப் பதில் ராதிகா இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் திருமங்கலம் தொகுதியில் ராதிகாவை நிறுத்த வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியினர் விருப்பப்படி ராதிகா நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications