தேச நலன் கருதி அதிமுகவோடு கூட்டணி-சிபிஎம்
கடலூர்: தேசத்தின் நலன் கருதியே அதிமுகவோடு தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கடலூரில் சி.பி.எம். சார்பில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழா கூட்டத்தில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
அன்று, ஆதரவு கொடுக்காத நீங்கள் இன்று அதிமுகவோடு கூட்டணியா? என்று திமுக கேட்கின்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 11 ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், சாதாரண மக்களிடம் வறுமை மட்டுமே பெருகி உள்ளது. சிலரிடம் மட்டுமே செல்வம் பெருகியுள்ளது.
மத மோதல்கள் உச்ச நிலைக்கு சென்றுள்ளது. ஜனநாயகம் நாசம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.
இந்தியாவில் ஆண்டு பட்ஜெட்டே ரூ.6.5 லட்சம் கோடிதான். ஆனால் நெருக்கடியில் சிக்கிய சில தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்துள்ளது.
எனவே தவறுகள் மலிந்த மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், மத வெறி சக்திகளுக்கு மாற்றாகவும் மூன்றாவது அணி அவசியமாகின்றது என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications