3 லட்சம் தபால் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்!
சென்னை: ஊதிய உயர்வு, போனஸ் போன்றவை குறித்த நடராஜ மூர்த்தி பரிந்துரைகளை எதிர்த்து நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் நாளை காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அஞ்சல்துறையில் புற நிலை ஊழியர்களுக்கு நடராஜமூர்த்தி கமிட்டி சில பரிந்துரைகளை அறிவித்துள்ளது ஆனால் இவை ஊவியர் நலனுக்கு விரோதமாக உள்ளதாகக் கூறி, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்து பரிந்துரை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக புறநிலை அஞ்சல் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மகாதேவய்யா அறிவித்தார்.
இதையடுத்து டெல்லியில் கடந்த 12-ந்தேதி உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். நேற்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) முதல் புறநிலை அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இதர அஞ்சல் ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுவதும் 3 லட்சம் ஊழியர்கள் இந்த போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் 3500 பேர் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications