மீண்டும் 10,000த்தை தொட்ட சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சற்று இடைவெளிக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை இன்று மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
காலையில் காலை வர்த்தகம் தொடங்கியதுமே 40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது சென்செக்ஸ். ஆனால் பிற்பகலுக்குப் பின் உறுதியான போக்கு நீடித்தது.
வர்த்தக முடிவில் 10004 புள்ளிகளுடன் நிறைவு கண்டது சென்செக்ஸ். நிப்டியில் 68 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 3050 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்த்த பங்குகள்: டாடா மோட்டார்ஸ் (4.74%), ஓஎன்ஜிசி (4.18%), ஏசிசி (3.56%), ரிலையன்ஸ் (2.63%)
வீழ்ச்சியைச் சந்தித்த பங்குகள்: ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (-7.25), ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (-4.22%), எச்டிஎப்சி (4.1%), மாருதி சுசுகி (2.12%)












Click it and Unblock the Notifications