சென்னை, மதுரை, கோவை, திருச்சி ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்

இதனால் பல ரயில்கள் தாமதமாகக் கிளம்பிச் செல்கின்றன. சோதனைகள் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை க்யூ பிரிவு போலீஸ் ஐ.ஜியின் செல்போனுக்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில், சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், ரயில்வே ஐ.ஜி. உமாகணபதி சாஸ்திரி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மிரட்டல் விடுக்கப்பட்ட எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும், அவர்களது உடமைகளும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. இதனால் ரயில் நிலையங்களுக்குள் நுழையவே பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
ரயில் நிலையங்கள் முழுவதும் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையும் நடத்தப்பட்டது.
பிளாட்பாரங்கள், நடைபாதை, பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுண்டர்கள், வாகனம் நிறுத்தும் இடம், பார்சல் சர்வீஸ் பிரிவு, நின்றிருந்த ரயில்கள் என எல்லா இடங்களிலும் சோதனைகள் நடக்கின்றன.
வெளியூர்களில் இருந்த வந்த ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தவிர மாநில போலீசாரும் பெருமளவில் சோதனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பல ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications