முன்மொழிய ஆள் தேடி அலைந்த சுயேச்சை
திருமங்கலம்: மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் மனுவை முன்மொழியவும், வழிமொழியவும் உள்ளூரை சேர்ந்த 4 வாக்காளர்களைத் தேடி தெருத் தெருவாக அலைந்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ள இந்தத் தொகுதியில் நேற்று 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்தத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் இவரது அலுவலகம் உள்ளது.
உதவி அதிகாரியாக திருமங்கலம் தாசில்தார் சேதுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரையில் ராமச்சந்திரனிடமோ அல்லது திருமங்கலத்தில் சேதுராமனிடமோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர்முகமது (51) என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்ய திருமங்கலம் வந்தார். வேட்பு மனு படிவத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
மனுவை நிரப்பிய அவர் அந்த மனுவை முன்மொழியவும், வழிமொழியவும் உள்ளூரை சேர்ந்த 4 வாக்காளர்களை மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் முன்மொழிய சென்றவர்களில் 2 பேரின் பெயர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் மனுவை தாக்கல் செய்ய முடியாமல் நூர்முகமது மீண்டும் வெளியே வந்தார்.
பின்னர் அந்தப் பகுதியில் சுற்றி அலைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள 4 பேரை தேடிப்பிடித்து மீண்டும் உதவித் தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன் மொழிய ஆள் தேடி இவர் கிட்டத்தட்ட 5 மணி நேரம் தெருத் தெருவாய் அலைந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழகத்தில் நடந்த மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் என 17 முறை போட்டியிட்டு டெபாசிட் இழந்த பெருமை உடையவராம்.
சிவசேனா வேட்பாளர்:
இவரைத் தொடர்ந்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டத் தலைவர் பரமசிவராஜா (43) என்பவரும் மனு தாக்கல் செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications