'ஹிட் விக்கெட்': தோல்விக்கு அத்வானி விளக்கம்!
டெல்லி: ராஜஸ்தான், டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டதற்கு நாங்களேதான் காரணம். இது ஹிட் விக்கெட் என்று பாஜக தலைவர் அத்வானி அட்டகாசமான விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அத்வானி, ராஜஸ்தான், டெல்லி சட்டசபை தேர்தல்களில், நம்மை நாமே தோற்கடித்துக் கொண்டோம். இதை ஹிட் விக்கெட் என்று கூறலாம்.
பா.ஜ.கவை வீழ்த்தக்கூடிய அளவுக்கு எதிரணியினரிடம் திறமையான பந்து வீச்சாளர்கள் இல்லை. நாமே அவுட் ஆனால் தான் உண்டு. ராஜஸ்தான், டெல்லி தேர்தலில் அது தான் நடந்துள்ளது.
டெல்லியில் தவறான வேட்பாளர்களை தேர்வு செய்ததாலும், ராஜஸ்தானில் உட் கட்சி தகராறு காரணமாகவும் தோல்வி ஏற்பட்டது.
பயங்கரவாதம், விலைவாசி போன்ற பிரச்னைகளை தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், ஊழல் அதிகரித்து விட்டதையும் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
குறிப்பாக, லோக்சபாவில் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்றார் அத்வானி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications