பதக்கங்களுடன் திரும்பிய பாக்சர்கள்-வரவேற்க வராத சங்கம்
டெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தாயகம் திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்களை வரவேற்க இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. அதை விட கொடுமையாக நான்கு வீரர்களும் டாக்சியைப் பிடித்து வீடு போய்ச் சேர்ந்ததுதான்.
இந்திய குத்துச்சண்டை அணி மாஸ்கோவில் நடந்த உலக குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றது. இதில் நான்கு வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தது.
பதக்கங்களுடன் நேற்று டெல்லி திரும்பியது இந்திய அணி. தங்களுக்கு ஏதாவது வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்த குத்துச்சண்டை அணிக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சிதான். காரணம், குத்துச்சண்டை சம்மேளனத்திலிருந்து ஒருவர் கூட வராததுதான்.
இதையடுத்து அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு வெளியே வந்த வீரர்களும், அணியினரும், டாக்சிகளைப் பிடித்து வெளியேறினர்.
வீரர்களுக்கும், அணியினருக்கும் கிடைத்த ஒரே ஆறுதல் அங்கு திரண்ட ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும்தான். அவர்களிடம் தாங்கள் வாங்கிய பதக்கங்களைக் காட்டி விட்டு கிளம்பிச் சென்றனர் குத்துச்சண்டை வீர்ரகள்.
கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது இந்திய குத்துச் சண்டை அணிக்கு ஒரு பதக்கம் கிடைத்தது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் பெற்று சாதனை படைத்த இந்திய குத்துச்சண்டை அணிக்கு சிறப்புப் பரிசுகள் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு பரிசு கூட வந்து சேரவில்லை என்பது போனஸ் துயரம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications