செல்வப்பெருந்தகையை பதவி நீக்க அதிமுக கோரிக்கை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையை பதவி நீக்கம் செய்துவிட்டு, மங்களூர் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சட்டசபை செயலாளர் செல்வராஜிடம், பர்கூர் அதிமுக எம்எல்ஏ தம்பிதுரை கொடுத்துள்ள மனுவில்,
8.5.06 அன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் தொகுதியில் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாகவும், மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து செயல்படப் போவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டம் 10வது சரத்தின்படி, எந்தக் கட்சியின் சார்பில் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தாமாக விலகும்பட்சத்தில் அவர் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது.
தானாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் அவரை பதவி நீக்கம் செய்யாமல், அவரது ராஜினாமா கடிதத்துக்கு காத்திருப்பது அவசியமல்ல. இதற்கு சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன.
எனவே காலம் தாழ்த்தாமல், அரசியல் அமைப்புச் சட்டம் 10வது சரத்தின் அடிப்படையில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ததாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications