குடியரசு தின பாதுகாப்பு: டெல்லி ராஜ்பாத்தில் 22 கண்காணிப்பு டிவி கேமராக்கள் பொருத்தம்
டெல்லி: குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்பாத் ஒன்றரை கிலோ தூரம் கொண்டது. இங்குதான் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். அப்போது தீவிரவாத தாக்குதல் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி செல்லும் சாலை, இந்தியா கேட் உள்ளிட்ட ராஜ்பாத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இந்த சாலை முழுவதையும் துல்லியமாக கண்காணிக்கக் கூடிய வகையில் இவை பொருத்தப்படுகிறது. இந்த கேமராக்களின் கண்களிலிருந்து ஒரு ஈ, காக்கை கூட தப்பாது என்று பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கும்.
நாலாபக்கமும் சுழலக் கூடிய பான் டில்ட் ஜூம் கேமராக்கள் இதில் இடம் பெறும். ராஜ்பாத் பகுதியில் இந்த 22 கேமராக்களையும் கண்காணிக்க பிரமாண்டமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.
மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக எந்தவித தாக்குதலும் நடந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications