மகாராஷ்டிரா அரசு உருவாக்கும் போர்ஸ்-1 கமாண்டோப் படை
நாக்பூர்: தீவிரவாதிகளின் தாக்குதலின்போது அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்த, என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்கு இணையான, போர்ஸ்-1 என்ற புதிய கமாண்டோப் படையை உருவாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படையில் முதல் கட்டமாக 250 பேர் இடம் பெறவுள்ளனர். இவர்களுக்கு அதி நவீன எம்பி5 துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. தீவிரவாதத் தாக்குதலின்பபோது இந்தப் படையினர் கமாண்டோக்களாக களம் இறங்குவார்கள்.
நாக்பூரில் நடந்து வரும் மகாராஷ்டிர மாநில சட்டசபைக் கூட்டத்தில் பேசுகையில், மாநில உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் இத்தகவலைத் தெரிவித்தார்.
முதல்வர் அசோக் சவான் பேசுகையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் ஆகியோர் பக்கம் தவறு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
ஜெயந்த் பாட்டீல் தொடர்ந்து பேசுகையில், மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மகாராஷ்டிர அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
மாநிலத்தின் உளவுக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும். புதிதாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, உளவுப் பணியில் சேர்க்கப்படுவர்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும். இந்த வழக்கில் அரசுக்கு உதவுவதற்காக சிறப்பு அரசு வக்கீலாக ஜூவால் நிகாம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 7 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 36 ஸ்பீட் படகுகள் வாங்கப்படும். அவற்றில் 12 படகுகள் உடனடியாக வாங்கப்படும் என்றார் பாட்டீல்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications