அஸார் காவலில் இல்லை - பாகிஸ்தானிலேயே இல்லை: தூதர்

சமீபத்தில்தான் மசூத் அஸார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி முக்தார் அகமது கூறியிருந்தார். அதை மறுக்கும் விதமாக தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் இப்படிக் கூறியுள்ளார்.
மேலும் மசூத் அஸார் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் அவர் எங்கு போனார் என்ற விவரமும் தங்களிடம் இல்லை எனவும் அவர் மேலும் குழப்பியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்களும் அஸாரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்தவரை, அஸார் வீட்டுக் காவலில் இல்லை. அவர் பாகிஸ்தானிலேயே இல்லை. எங்கு இருக்கிறார் என்றும் எங்களுக்குத் தெரியாது.
அதேபோல இந்தியா கோரி வரும் தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் இல்லை. தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறான் என்று இந்தியா கூறினாலும் கூட அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில் தாவூத் இங்கு இல்லை.
ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார் மாலிக்.
அஸார் வீட்டுக் காவலில் இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் பாகிஸ்தானிலேயே இல்லை என்று பாகிஸ்தான் தூதர் கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications