லண்டன்-ஆந்திர மாணவியை கொன்ற இந்தியருக்கு ஆயுள்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஜோதிர்மாய் (23) . அதே ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் குமார் (25). இருவரும் ஒரே கல்லூரியில் பிசியோதெராபி படித்தனர். மேல்படிப்புக்காக இருவரும் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தி்ல் சேர்ந்தனர்.
ஹான்ஸ்வர்த் என்ற இடத்தில் பிளாட்டில் தனித்தனியாக அறை எடுத்து தங்கிப் படித்தனர்.
இந் நிலையில் கடந்த மே மாதம் 6ம் தேதி ஜோதிர்மாய் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து மாணவர் நாகராஜகுமார் கையில் ரத்தக் காயத்துடன் போலீசாரை அணுகி, சில நீக்ரோ வாலிபர்கள் ஜோதிர்மாயையும் தன்னையும் தாக்கியதாகவும், இதில் ஜோதிர்மாய் இறந்துவிட்டதாகவும் கூறினார்.
ஆனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜோதிர்மாயை அவர் கொலை செய்தது தெரியவந்தது.
ஜோதிர்மாயை ஒருதலையாக காதலித்து வந்த நாகராஜ்குமார் அவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த காதலை ஜோதிர்மாய் ஏற்கவில்லை. இந் நிலையில மே மாதம் 6ம் தேதி ஜோதிர்மாயி்ன் அறைக்குச் சென்று அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார் நாகராஜ்குமார்.
தப்பிக்க போராடிய ஜோதிர்மாயின் தலையை சுவரில் மோதியுள்ளார். இதி்ல் அவர் மயங்கிய பின் அவரை கற்பழித்துள்ளார். இதையடுத்து ஜோதிர்மாய் இறந்தார்.
இதையடுத்து போலீசை திசை திருப்ப தனது கையில் கத்தியால் வெட்டிக் கொண்டு கருப்பின வாலிபர்கள் தாக்கியதாக பொய் கூறினார்.
இது குறித்து விசாரணை நடத்திய லண்டன் பர்மிங்காம் கிரெளன் நீதிமன்றம் நாகராஜகுமாருக்கு 25 வருடம் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!













Click it and Unblock the Notifications