கச்சா எண்ணெய் விலை 36 டாலராகக் குறைந்தது!!
சிங்கப்பூர்: கடந்த ஒரு சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 40.04 டாலராக குறைந்து இருந்தது. வர்த்தகத்தின் இடையே இதன் விலை 39.19 டாலராக மிகவும் சரிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்துக்குள் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு மேலும் 4 டாலர்கள் வீழ்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய வீழ்ச்சி இது என்று ஓபெக் (OPEC) தெரிவித்துள்ளது. இதைத் தொடரந்து பெருமளவு உற்பத்திக் குறைப்புக்கு தயாராகின்றன சர்வதேச எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்.
ஜனவரி 1-ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 22 லட்சம் பீப்பாய் அளவிற்கு உற்பத்தியைக் குறைக்கவிருப்பதாக அறிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையால் பெட்ரோலிய பயன்பாடு வெகுவாக குறைந்து போயுள்ளதால் பெட்ரோல் வாங்குவது 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
