நெல்லை அருகே தேமுதிக செயலாளர் படுகொலை
நெல்லை: நெல்லை அருகே தேமுதிக செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மானூர் அருகேயுள்ள வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த பரமசிவதேவர் மகன் முருகன். தேதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த வந்த இவர் விவசாயம் மற்றும் வட்டி தொழில் செய்து வந்தார்.
இதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் மாரியப்பன். அதிமுக பிரமுகரான இவர் வாகைகுளம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். இவரது மனைவி சுந்தரி தற்போது வாகைகுளம் பஞ். தலைவராக உள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தேமுதிக கொடிகம்பம் திருடு போனது. இதுகுறித்து முருகன் மானூர் போலீசில் புகார் செய்தார். இதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை.
கொடிகம்பத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் முருகன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முருகன் வாகைகுளத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மாரியப்பன், தேமுதிகவை சேர்ந்த ஆறுமுகம், அதிமுக பிரமுகர்கள் சுப்பையா, சுப்பு உள்பட 6 பேர் அரிவாளால் முருகனை வெட்டிவிட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகனை அங்கிருந்தவர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் இறந்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications