அதிமுக கூட்டணியில் (கார்த்திக்கை கழற்றிவிட்ட) பார்வர்ட் பிளாக்

பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் அணியில் உள்ள கட்சி பார்வர்ட் பிளாக். அதிமுகவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் பிஸ்வாசும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் தனது கட்சியும் இணைவதாக அறிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடிகர் கார்த்திக்கை வைத்து தமிழகத்தில் தனது கட்சியை நடத்தி வந்தார் பிஸ்வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவரை கார்த்திக் படாதபாடுபடுத்தி எடுத்துவிட்டார்.
இதனால் வெறுத்துப் போய் கார்த்திக்கை பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து கோபம் கொண்ட கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
இந் நிலையில் தான் போயஸ் கார்டன் படியறியுள்ளார் பிஸ்வாஸ். அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்ததோடு வரும் திருமங்கலம் இடைத் தேர்தலிலும் தனது கட்சியின் ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்துள்ளார்
இந்தச் சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பசும்பொன் பாண்டியன், மாநிலப் பொறுப்பாளர் கதிரவன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பின் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,
திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய மாநில செயற்குழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமையில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தோழமை கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.
மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் திருமங்கலம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications