நியூஸ்வீக் எலைட்-50 பட்டியலில் சோனியா, ஷாருக்கான்

Subscribe to Oneindia Tamil

News Week
நியூயார்க்: அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் வெளியிட்டுள்ள உலகின் 50 புகழ் பெற்ற மனிதர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் உலகின் 50 புகழ் பெற்ற நபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நடிகர் ஷாருக்கானும் இடம் பெற்றுள்ளனர்.

சோனியா காந்திக்கு 17வது இடமும், ஷாருக்கானுக்கு 41வது இடமும் கிடைத்துள்ளன.

ஷாருக்கானுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சர்வதேச பயங்கரவாதி ஓசாமா பின்லேடன்.

சீன அதிபர் ஹூ ஜின்டாவோ பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் (7), ஜெர்மனி சான்சலர் ஏஞ்செலா மெர்க்கல் (8), ரஷ்ய பிரதமர் புடின் (9), ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (11), பில் கிளிண்டன் (13), ஹில்லாரி கிளிண்டன் (14), பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி (20), ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி (21), போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் (37), தலாய் லாமா (46) உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+