பாக். தப்ப முடியாது-இந்தியா எதற்கும் தயார்: பிரணாப்

டெல்லியில், பல்வேறு நாடுகளின் இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.
120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். நாளை பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தவுள்ளார்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நிலவும் உறவு, ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இரு தலைவர்களும் விளக்கவுள்ளனர்.
இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தீவிரவாதம், தீவிரவாதிகள், தீவிரவாத முகாம்கள் ஒழிப்பு குறித்து பாகிஸ்தான் பல உறுதிமொழிகளை அளித்துள்ளது. அவற்றை அது நிறைவேற்றியே ஆக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
என்ன உறுதிமொழியையெல்லாம் பாகிஸ்தான் கொடுத்ததோ அதை அது நிறைவேற்றியாக வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். சர்வதேச சமுதாயத்தில் பொறுப்பான ஒரு நாடு தனது கடமையிலிருந்து தவற முடியாது.
நமது மக்கள் பலரின் உயிர் பறிபோயுள்ளது. பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. எனவே பாகிஸ்தான் கண்டிப்பாக செயல்பட்டாக வேண்டும். அதிலிருந்து தப்புவதை அனுமதிக்க முடியாது.
ராணுவத் தாக்குதல் உண்டா?
இந்தியா எதற்கும் தயாராக உள்ளது. ராணுவத் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லி விட்டுச் செய்ய முடியாது.
அதை பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி விட்டுச் செய்ய முடியாது. அப்படிச் செய்வது ராணுவ நடவடிக்கை அல்ல. அரசு அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனையில் வைத்துள்ளது என்றார் முகர்ஜி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications