நில விவகாரம்-வீரபாண்டிக்கு நோட்டீஸ்
சென்னை: சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்தவர்களின் நிலங்களைப் பறிக்க முயன்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமே காரணம். அவரது தூ ண்டுதலின் பேரில்தான் இத்தனை குடும்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக குடியுரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் 27.6.2008 அன்று உயர்நீதிமன்ற பெஞ்ச் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதில் அங்கம்மாள் காலனியில் இருந்து குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அவர்களை அங்கு மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சேலம் போலீஸ் கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கம்மாள் காலனி வாசிகள் 3.7.2008ல் சேலம் காவல்துறை கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, வடிவேல், கோகிலா உள்பட 23 குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தாங்கள் கொடுத்த புகார் மனு மீது அமைச்சர் தலையீட்டின் பேரில் போலீசார் விசாரணை நடத்தாமல் இருப்பதாக வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி மீண்டும் அதே இடத்தில் தங்களை குடியமர்த்த உத்தரவிட வேண்டும் என்றும், அங்கம்மாள் குடியிருப்பு வாசிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் தள்ளி வைப்பதாக நீதிபதி சுகுணா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications