70 ஆண்டுகளில் டொயோட்டாவுக்கு முதல் நஷ்டம்!

கார் உற்பத்திக்கு நிகராக இல்லாமல் விற்பனையில் சரிவு ஏற்பட்டதே, இந்த நஷ்டத்துக்குக் காரணம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நஷ்டத்தால் டொயோட்டா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், ஒரு சாதனையையும் இந்த ஆண்டு ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகில் முதலிடம் பெற்ற நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ்தான். ஆனால் 2008ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிக கார்களை விற்று சாதனைப் படைத்திருப்பது டொயோட்டாதான். கடந்த 9 மாதங்களில் 7.05 மில்லியன் கார்களையும், ஜெனரல் மோட்டார்ஸ் 6.66 மில்லியன் கார்களையும் விற்றுள்ளன.
இந்த நிறுவனத்தின் இன்னொரு சாதனை, இத்தனை நெருக்கடியிலும் எந்த ஊழியரையும் வேலையை விட்டு அனுப்பாமல் பார்த்துக் கொண்டதுதான். ஆனால் ஜெனரல் மோட்டார்ஸில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சம் பணியாளர்களுக்கும் மேல் நீக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச நிதி நெருக்கடி டொயோட்டாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகிற ஆண்டுகள் மிக மோசமானதாக இருக்கும். ஆனால் இதை சிக்கனமாக, திறமையோடு சமாளித்தாக வேண்டும் என டொயோட்டா நிறுவனத் தலைவர் கட்சோகி வாட்டனபே கூறியுள்ளார்.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு 25.26 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்தது. ஆனால் இந்த ஆண்டு 1.66 பில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
ஜப்பானின் மற்றொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் இந்த ஆண்டு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications