கஸாப் எழுதிய கடிதம்-பாக். தூதரிடம் ஒப்படைப்பு

மும்பை போலீசாரின் காவலில் உள்ளான் கஸாப். அவனை பாகிஸ்தானியே இல்லை என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ஆனால் கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் தான் என்பதற்கான அத்தனை ஆதாரங்களையும் மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இந்த நிலையில், கஸாப் சட்ட உதவி கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளான். இந்தக் கடிதத்தை மத்திய வெளியுவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தக் கடிதத்தில் தனக்கு சட்ட உதவிகள் செய்ய வேண்டும். தன்னுடன் தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட இஸ்மாயில் கானின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளான் கஸாப்.
மும்பை போலீஸாரால் இந்தக் கடிதம் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பாகிஸ்தான் தூதராக பொறுப்பு வகிக்கும் அஸ்ரபியாப், வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
பாகிஸ்தான் விவகாரங்களுக்கான இணை செயலாளர் ராகவன், அஜ்மல் கடிதத்தை பாகிஸ்தான் தூதரிடம் வழங்கினார்.
கஸாப் அடையாளம் - பாக்.குக்கு ஆதாரம் வேண்டுமாம்:
கடிதம் பெறப்பட்டதை பாகிஸ்தான் அரசு நேற்று உறுதிப்படுத்தியது. இருப்பினும் கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்பதற்கான ஆதாரத்தையும் இந்தியா தர வேண்டும் என கோரியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் கடிதத்தை எழுதியதால் மட்டும் கஸாப் பாகிஸ்தான் நாட்டவர் என்று ஆகி விட முடியாது. அதற்கான ஆதாரங்கள் தேவை.
கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தை இந்தியா வழங்க வேண்டும் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications