இந்தியா தாக்கினால் பாகிஸ்தானுக்கு உதவுவோம்-தலிபான்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து அந்த நாட்டையே குட்டிச்சுவராக்கிய தலிபான்களை அமெரிக்கா தலைமையிலான படைகள் விரட்டியடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.
ஆனாலும் அங்கு தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டேவுள்ளது. பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்தபடி இவர்கள் அமெரிக்கப் படைகளை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து அமெரிக்கா-நேடோ படைகள் இவர்களை இரவு பகலாக தாக்கி வருகின்றன.
இந் நிலையில் தலிபான் அமைப்பின் முக்கிய கூட்டாளியான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தானின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் ரகசிய இடத்தில் இருந்தபடி பாகிஸ்தானின் முக்கிய பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இந்தியாவை தாக்க தயாராக உள்ளோம். எங்களிடம் போர்ப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர்.
தற்கொலைப் படையைச் சேர்ந்த எங்கள் வீரர்கள் ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதியில் நிலை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி இந்தியப் படைகளைத் தடுப்பர்.
தலிபான் எதிர்பார்த்து காத்திருந்த ஜிஹாத் போருக்கான நேரம் வந்துவிட்டது.
உலகின் ஒரே அணு ஆயுத இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை ஒழித்துக் கட்ட கண்ணுக்குத் தெரியும், தெரியாத எதிரிகளை நாங்கள் நன்கறிவோம். அவர்களை முஜாஹிதீன்கள் வெறியோடு எதி்ர்கொள்வார்கள் என்றார்.
இவனை ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications