For Daily Alerts
Just In
உற்பத்தி குறைப்பு-மாருதி திட்டம்
டெல்லி: கார் விற்பனையில் தொடர்ந்து இதே போன்ற மந்த நிலை நீட்டில் அடு்த்த ஆண்டு தனது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது மாருதி நிறுவனம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் காரணமாக கார் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.
அடுத்த ஆண்டும் இதே மந்த நிலை நீடித்தால், கார் உற்பத்தி அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழயில்லை என சுசுகி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஷின்சோ நாகானிஷி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் முதல் இந்த நவம்பர் வரையிலான கார் விற்பனை எதிர்மறையாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நிஸ்ஸான் நிறுவனத்துக்கு கார் தயாரித்துத் தரும் ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 24, 2008, 16:41 [IST]