Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு கரசேவை செய்தவர் கருணாநிதி-சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

Brinda Karat
டெல்லி: பாஜகவுக்கு கரசேவை செய்த கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறைகூற தகுதியில்லை என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் காட்டமாகக் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்ததை முதல்வர் கருணாநிதி கண்டித்திருந்தார்.

அயோத்தியில் பாஜக கரசேவை நடத்தியபோது தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதாவுடன் எப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்ததோ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து பிருந்தா காரத் கூறுகையில்,
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தியபோது அதில் பங்கேற்று பாஜகவுக்கு கரசேவை செய்தவர் கருணாநிதி.

2002ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது கூட பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்தது திமுக.

இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறைகூற கருணாநிதிக்கு தகுதியில்லை.

பாஜகவின் வகுப்புவாத மற்றும் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத, அரசியலை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஒன்றை அமைக்க இடதுசாரி கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து வரும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றார் பிருந்தா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+