பந்தப்புளி கோவில் முதல்வர் உத்தரவால் திறப்பு
சங்கரன்கோவில்: சர்ச்சைக்குரிய சங்கரன்கோவில், பந்தப்புளி மாரியம்மன் கோவிலை திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவில் இன்று திறக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவிலில் தலித் மக்கள் நுழைய ஒரு பிரிவு சமுதாயத்தினர் அனுமதி மறுத்து வந்தனர்.
இதையடுத்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் தலித்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், தலித்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் வழிபட உரிமை உண்டு என நான்கு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இருப்பினும் கோர்ட் உத்தரவின்படி தலித்கள் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பிரச்சினை வெடித்ததால் கோவிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி விட்டது.
இதையடுத்து கோவிலை திறக்க வேண்டும், தலித்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி தலித் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வந்தன.
நீதிமன்றத் தீர்ப்பு தலித் மக்களுக்கு சாதகமாக வெளிவந்த நிலையிலும், அத்தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காத நிலையிலும், மேல் முறையீட்டைச் சுட்டிக் காட்டி கோவிலைப் பூட்டுவதும், தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முடி யாதபடி 144 தடை உத்தரவு போடு வது, அரசு நிர்வாகமே சட்ட விரோத மாக செயல்படும் நிலையாகும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவிலைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி கோவிலைத் திறக்குமாறும், அனைத்து மக்களையும் கோவிலில் சென்று வழிபட நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ், தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஐஜி பிரதீபன் ஆகியோர் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.
பின்னர் தலித்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு பிரிவைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
கோவில் திறப்பையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications