விடுதலைச் சிறுத்தைகள் நடவடிக்கை சரியல்ல - வரதராஜன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இலங்கை விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கை ஏற்கக்கூடியதாக இல்லை. வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசுகையில், ஜனநாயக வழியில் நின்று கருத்துக்களைச் சொல்லலாம், இயக்கங்களை நடத்தலாம்.

மாறாக கட்சியின் அலுவலகத்தை தாக்குவது, கலவரங்கள் செய்வது என்பது மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கைகள் ஏற்கக்கூடியது அல்ல.

தமிழகத்தில், தனி ஈழ ஆதரவுகுரல் கேட்கிற நிலையில் தனித்தமிழ் நாடு கோஷத்தை சிலர் எழுப்புகின்றனர். ஆளுங் கட்சிக்கு இவர்களுடன் இருக்கும் அரசியல் உறவின் தாக்கத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முதல்வர் கருணாநிதியை சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோருடன் நாங்களும் சென்று சந்தித்து நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதி ரான இந்த கொடூர ஒப்பந் தத்தை எதிர்க்க வேண்டும். இதில் தாங்கள் தலையிட வேண்டுமென தோழமை யுடன் வலியுறுத்தினோம். ஆனால் ஒப்பந்தத்திற்கு திமுக ஆதரவு அளித்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கான ஆதரவை இடது சாரி கட்சிகள் விலக்கிக் கொண்டன.

இப்போது நாடு முழுவதும் மதவெறி சக்திகள் வெறியாட்டம் போடுகின் றன. எனவே மத்தியில் காங் கிரஸ் அல்லாத பிஜேபி அல்லாத இந்த இரண்டு கட்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளாத கட்சிகளுடன் இணைந்து 3வது அணியை உருவாக்குவது என்ற கட்சியின் நிலைபாட்டின்படி உ.பி.யில் மாயாவதி கட்சி, ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன இடதுசாரி கட்சிகள் உடன்பாடு கண்டுள்ளன.

தமிழகத்தில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஎம் முதுபெரும் தலைவர் சுர்ஜித் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நாட்டு நலன் கருதி எங்களோடு அணி சேர்ந்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, இப் போது 96 எம்எல்ஏக்களு டன் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் அமெரிக்க ஆதரவு ஒப்பந் தங்களை எதிர்க்க முடியாத நிலையில் திமுக உள்ளது.

இந்நிலையில் அதிமுக வுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள இடது சாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த அணி வகுப்பு வரும் நாடாளுமன் றத் தேர்தலில் பெரும் வெற்றி பெறும் என்றார் வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+