மும்பையில் அமைதியான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நட்சத்திர ஹோட்டல்களிலும் கூட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வழக்கமான முறையில் இல்லை. அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான புக்கிங்குளும் கூட கடந்த காலங்களைப் போல இந்த முறை இல்லை.
மும்பை ஹோட்டல்களில் இந்த ஆண்டு 30 முதல் 40 சதவீதம் வரை புக்கிங்குகள் குறைந்துள்ளன. பெரிய ஹோட்டல்கள் பலவற்றில் புத்தாண்டுக்காக வருவோர் குறைந்து விட்டதால் அறைகள் நிரம்பாமல் உள்ளதாக மேற்கு இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கோர்டே கூறியுள்ளார்.
மும்பை மற்றும் அண்டையில் உள்ள கோவா மாநிலத்திலும் ஹோட்டல்கள் பலவும் புக்கிங் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இந் நிலையில் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், மும்பையில் மட்டும் வழக்கமான அளவில் இல்லாமல், அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது.
தேவாலயங்களில் தீவிரவாதம் மறைந்து, அன்பும், அமைதியும் நிலவ கோரி பிரார்த்தனை செய்யப்பட்டது. மும்பை தாக்குதலில் இறந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் உற்சாகம்...:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னை மாநகரம் உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நள்ளிரவுப் பிரார்த்தனை வழக்கமான உற்சாகத்துடனும், பாரம்பரியத்துடனும் நடந்தது.
இன்று காலை புத்தாடை அணிந்து கிறிஸ்தவ சமுதாயத்தினர் தேவாலயங்களில் நடந்த சிறப்புப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் விளக்கலங்காரத்தில் ஜொலித்தன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications