'மது': வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-ராமதாஸ்
சென்னை: மராட்டிய மாநிலத்தைப் போல குடியிருப்பு பகுதிகளில் மதுக் கடைகளை மூட வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்ததந்தப் பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மது நாட்டுக்கு வீட்டுக்கு உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள். அரசாங்கமும் இதனை ஒப்புக் கொள்கிறது. சமுதாயத்தில் நிலவும் அனைத்து கேடுகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்காவிட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்காதவர்களே இல்லை என்கிற அவல நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிடும்.
அந்த அளவுக்கு நம்முடைய இளைய சமுதாயத்தினரிடையே குடிப்பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிக்கு அடிமையாகி வருகின்றார்கள் என்பதை எல்லாம் நானும், என்னுடன் வந்த அனைத்துச் சமய சமுதாய பெரியவர்களும் முதல்வர் கருணாநிதியிடம் எடுத்து சொல்லி மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாதாடினோம்.
எங்களை போன்று மதுவின் தீமைகளை நன்றாக உணர்ந்து வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியும் முழு மதுவிலக்கு என்ற இலக்கை அடைவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இப்போது அதில் முதல்கட்டமாக இனிமேல் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், மதுக்கடைகளின் வேலை நேரம் நாள்தோறும் இரவில் ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்திருக்கிறார்.
முதல்வர் எடுத்துள்ள இந்த முதல் கட்ட நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.
மது அத்தியாவசிய பண்டமல்ல. எனவே நியாயவிலை கடைகளைப் போல் பகல் நேரம் முழுவதும் மதுக்கடைகளைத் திறந்து வைக்கத் தேவையில்லை. வார விடுமுறை நாட்களிலும், முக்கியப் பண்டிகை நாட்களிலும் மதுக் கடைகளை மூடி வைக்க உத்தரவிட வேண்டும்.
மதுக் கடைகளோடு இணைந்த குடிப்பகங்களை (பார்கள்) எல்லாம் இழுத்து மூட வேண்டும். காணும் இடமெல்லாம் மதுக்கடைகள் என்ற இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களின் விருப்பத்திற்கு மாறாக மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் திறக்கப்படும் மதுக் கடைகளை மூடி விட வேண்டும் என்று அங்கு வசிப்பவர்களில் கணிசமானவர்கள் கோரிக்கை வைத்தால், அதை ஏற்று மதுக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
இந்த விஷயத்தில் பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கும் மராட்டிய மாநில ஏற்பாட்டை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும். முதல்வரின் அடுத்த நடவடிக்கைகள் இப்படி அமைய வேண்டும்.
மதுபானம் பளபளப்பாய் தோன்றும். அது மெதுவாய் இறங்கும். முடிவில் பாம்பை போல் கடிக்கும். வீரியனைப் போல் தீண்டும் என்பது வேதவாக்கு. இந்த வேதவாக்கை நினைவில் நிறுத்தி மதுவை முற்றிலுமாக ஒழிப்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளை அடுத்தடுத்து உடனடியாக மேற்கொண்டு மது அரக்கனை முற்றிலுமாக ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையினை தமிழகம் பெற வேண்டும். இந்த லட்சியத்தை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்ற நம்பிக்கையுடன் முதல்வர் எடுத்துள்ள முதற்கட்ட நடவடிக்கைகளை மீண்டும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications