பணவீக்கம் 6.61% ஆக குறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது. டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 6.84 சதவிகிதத்திலிருந்து 6.61 சதசவிகிதமாகக் குறைந்துள்ளது.
இது கடந்த 9 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்
சென்வாட் வரியை அரசு குறைத்தது, வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தது போன்ற காரணங்களால் அனைத்துப் பொருள்களின் விலைவாசியும் கணிசமாகக் குறைந்திருந்ததாகவும், அதனால்தான் பணவீக்கத்தில் இவ்வளவு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வருகிற மார்ச் மாதத்துக்குள் இது 5 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் அரவிந்த் வீரமணி.












Click it and Unblock the Notifications