திருப்பதியில் ஜனவரி 7ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ வைபவம் ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 6ம் தேதி திருமலை கோவிலை தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். ஏகாதசியான 7ம் தேதி அதிகாலை மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட்ட பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும்.
காலை 7 மணி முதல் 9 மணி வரை மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்கரதத்தில் உற்சவ மூர்த்தியாக திருமலையின் நான்கு மாடவீதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மாலை 5 மணிக்கு கோவிலில் ரங்க நாயக மண்டபத்தில் ஆஸ்தான வைபவம் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசியன்று தோமாலை, அர்ச்சனை, அர்ச்சானந்தர சேவைகள் ரத்து செய்யப்படும்.












Click it and Unblock the Notifications