இன்றுடன் கெடு முடிகிறது -அடுத்தது என்ன?

கடந்த மாதம் இதே நாளில்தான் மும்பையை உலுக்கியெடுத்தது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதல். கிட்டத்தட்ட 60 மணி நேரம் நீடித்த இந்த படுகொலைச் சம்பவத்தால் உலகமே அதிர்ந்து போனது.
இந்தப் பாதகச் செயலை அரங்கேற்றியவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் என்று உறுதியானதால், தாவூத் இப்ராகிம், மெளலானா மசூத் அஸார், லக்வி உள்ளிட்ட 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும், தீவிரவாதிகளை ஏவி விட்டவர்களைக் கைது செய்ய வேண்டும், தீவிரவாத முகாம்களை ஒழிக்க வேண்டும் என இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு மாத கெடு விதித்தது.
அந்தக் கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்தியா விமானத் தாக்குதலைத் தொடுக்கக் கூடும் என்ற அச்சம் பாகிஸ்தானை ஆட்டிப்படைத்து வருகிறது. இதை எதிர்பார்த்து அந்நாட்டு விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் வருவது உறுதி என்பதை நிரூபிப்பது போல இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இன்றுடன் கெடு முடிகிறது.
ஆனால் இந்தியாவின் ஒரு கோரிக்கையையும் பாகிஸ்தான் இதுவரை ஏற்கவில்லை. அதை விட முக்கியமாக மும்பையில் பிடிபட்ட தீவிரவாதியான கஸாப், எங்கள் நாட்டைச் சேர்ந்தவனே இல்லை என்று பச்சைப் பொய்யையும் கூறிக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக அடுத்து என்ன நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவுள்ளது என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
தனது பிராந்தியத்தையும், இறையாண்மையையும் காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதன் குறுக்கே நாங்கள் வர மாட்டோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications