முல்லைத்தீவு-புலிகள் ரன்வேயை பிடித்த ராணுவம்
கொழும்பு: முல்லைத்தீவில் நடந்த கடும் சண்டையின்போது விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையை பிடித்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சி நகரை கைப்பற்றுவதற்கு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டதையடுத்து ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று வட பகுதியில் உள்ள புலிகளுடைய முக்கிய நிலைகள் மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயகாரா தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள பரந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முகமாலை ஆகிய இடங்களில் இந்த விமான தாக்குதல்கள் நடத்தப் பட்டதாகவும், நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு பயன்படுத்தி வந்த விமான ஓடுபாதை ஒன்றை கைப்பற்றி இருப்பதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயகாரா கூறினார்.
புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 3வது விமான ஓடுபாதை இது என்றார் அவர்.
மேலும் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் பரந்தன்- முல்லைத்தீவு சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் கான்வென்ட் ஒன்றும் சேதமடைந்ததாகவும் விமானப்படை பயன்படுத்திய 'கிளஸ்டர் பாம்ஸ்' குண்டுகளால் அதிக இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படை குண்டு வீச்சில் 85 பசு மாடுகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications