தீ விபத்து-ரூ.8 கோடி பஞ்சு எரிந்து நாசம்
தூத்துக்குடி: தூத்துக்குடியி்ல் உள்ள பஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள பஞ்சு பொதிகள் எரிந்து நாசமாயின.
கொல்கத்தாவை சேர்ந்தவர் அருண்குமார் சுரேகா. இவருக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடி சிப்காட் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இதனை மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அஜிஸ் முகாரியா என்பவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
இங்கு தமிழகம் முழுவதும் உள்ள காட்டன் மில்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான ரா காட்டன் எனப்படும் உயர்தர பஞ்சுகள் சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.
இங்கு வழக்கம்போல் தமிழகத்தில் உள்ள மில்களுக்கு சப்ளை செய்வதற்காக தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ஷிப்பிங் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 1000 டன் பஞ்சு மூடைகள் சேமி்த்து வைக்கப்பட்டிருந்தது. இந்த குடோனில் இருந்த பஞ்சு மூடைகள் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அந்த நேரத்தில் அங்கு வாட்சுமேன் கூட இல்லாததால் அதனை யாரும் கவனிக்கவி்ல்லை. இதனால் தீ அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகளில் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதனால் தூத்துக்குடி தெர்மல் நகர், துறைமுகம், டவுண் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 8 தீயணைப்பு வண்டிகள் மற்றும் தண்ணீர் லாரிகள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் எடை கொண்ட பஞசுமூடைகள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு இல்லை. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலையில் சிலிண்டர் வெடிப்பு:
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சுரேஷ். இவர் சொந்தமாக கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டியில் கடல் உணவு ஏற்றுமதி செய்யும் சிறிய தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதன் முன் பகுதியில் கூரை செட் போடப்பட்டுள்ளது.
நேற்று இரவு பொதுமக்கள் வெடித்த பட்டாசு ஒன்று கூரையின் மேல் பட்டு தீ பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் கூரை செட் முழுவதும் தீ பற்றிக் கொண்டது. அப்போது அதனுள்ளிருந்த சமையல் காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். இதில் குடிசையினுள் இருந்த மேலும் 2 சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த உபகரணங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications