வாக்காளர்களுக்குப் பணம்: திமுக - அதிமுக கடும் மோதல்
மதுரை: வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து திருமங்கலத்தில், திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதனால் தொகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இந்த மோதலில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக திமுகவினருக்குத் தகவல் கிடைத்தது.
திருமங்கலத்தில் 4 இடங்களில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், இது குறித்து தகவல் அறிந்ததும் திமுகவினர் அந்த 4 இடங்களுக்கும் சென்று பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் அதிமுகவினரின் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைப் படம் பிடிக்க முயன்ற ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமரா மேன் தாக்கப்பட்டு கேமராவும் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தாங்கள் பணம் கொடுக்க முயன்றதாக கூறுவதை அதிமுக தரப்பு மறுத்துள்ளது. திமுகவினர்தான் பணம் கொடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரு தரப்பு சார்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த சம்பவம் காரணமாக திருமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது. வன்முறை மூளாமல் தடுக்க போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications