ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் எழுச்சி பேராபத்தானது - காங்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்திருப்பது மதச்சார்பின்மைக்கு பேராபத்தாகும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், நாட்டில் மதச்சார்பின்மை சுருங்கி வருவதையே பாஜகவின் இந்த வெற்றி காட்டுகிறது.
இது எனக்குக் கவலை அளிக்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த (காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு) கசப்பான சம்பவங்களின் விளைவே இது என நான் கருதுகிறேன்.
வளர்ச்சியைப் பலி கொடுத்து விட்டு மதச்சார்பின்மை சுருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி, ஒட்டு மொத்த நாட்டுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகும். பாஜகவின் ஒரே குறிக்கோள், மக்களிடையே மதப் பதட்டத்தை ஏற்படுத்துவது மட்டுமே. அவர்களது மதவாத கண்ணோட்டத்தின் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களால் வெறுக்கப்படும் கட்சியாக பாஜக உள்ளது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முடிவெடுப்பார்கள். தேசிய மற்றும் மதச்சார்பற்ற அடையாளத்துடன் கூடிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்.
அமர்நாத் நில விவகாரம்தான் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறி விட முடியாது என்றார் ஆசாத்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications