கொலைத் திட்டத்துடன் வந்த 6 பேர் கைது
செங்கோட்டை: முக்கியப் பிரமுகர்களைக் கொல்லும் சதித் திட்டத்துடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலை நெல்லை மாவட்ட போலீஸார் கைது செய்து, கொலைச் சதியை முறியடித்துள்ளனர்.
செங்கோட்டை அருகே, புளியரை பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக பைக்கில் வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சேக் பாதுஷா, மற்றும் பெரிய குப்தா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுதாகிர், இருவரையும் பிடித்து சோதனை போட்டனர்.
அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் ரசாயண பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும தகவல்கள் வெளியானது.
இந்து முண்ணனி தலைவர் குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைதான ஹனீபாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மேலப்பாளயைத்தை சேர்ந்த கிச்சான் புகாரி தென்காசி வந்துள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே தன்னுடன் சிறையில் இருந்த செங்கோட்டையை அடுத்த மேக்கரையை சேர்ந்த மைதீ்ன் மகன் சாதிக் அலி என்பவரை சந்தித்து நெல்லையில் உள்ள தனக்கு வேண்டாத சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான வெடிமருந்து வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதனை அடுத்து மேக்கரையை சேர்ந்த தாக் கோபால் என்பவரிடமிருந்து வெடிகுண்டு தாயாரிக்க தேவையான ராசாயான பொருட்களை வாங்கி வரும்போதுதான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
மேலும் இந்த சதிதிட்டம் மற்றும் வெடி மருந்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த முல்லன் செய்யதலி என்பவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
