உமர் அப்துல்லாதான் முதல்வர்: பரூக் உறுதி

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது.
முதல்வர் பதவிக்கு கட்சிசியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமர் அப்துல்லாவின் பெயரை அவரது தந்தை பரூக் அப்துல்லா பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் கடைசி நேரத்தில் உமர் அப்துல்லாவுக்குப் பதில் பரூக்கே பதவியேற்கக் கூடும் என்று செய்தி கிளம்பியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பரூக்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உமர் அப்துல்லாதான் முதல்வர். இளம் தலைவர்தான் இனிமேல் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது.
உமர் அப்துல்லாவை முதல்வர் பதவியில் அமர்த்துமாறு கட்சிக்கு நான் பரிந்துரை செய்துள்ளேன்.
மாநிலத்திற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உமரைப் போன்ற இளம் தலைவர்கள்தான் தேவை என்றார் பரூக்.
உமர் அப்துல்லா கூறுகையில், எனது தந்தையின் வழிகாட்டுதலின்படி நான் நடப்பேன். காங்கிரஸ் கட்சியுடன் முறைப்படியான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. டெல்லி செல்லவுள்ளேன். அங்கு காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளேன் என்றார் உமர்.
இந்தியாவின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவரான உமர் அப்துல்லாவுக்கு 38 வயதாகிறது. சமீபத்தில் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் உமர் அப்துல்லா பேசியது அனைவரையும் கவர்ந்திழுத்தது என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications