'அத்வானியை பிரதமராக ஏற்றால் விஜயகாந்துடன் கூட்டணி'

தமிழக பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் மேலிட தமிழக பார்வையாளரான ரவிசங்கர் பிரசாத்தும் பங்கேற்றார். கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரசாத்,
பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் யாரும் போகக்கூடாது என்று சொல்கிறார்களே தவிர, பாகிஸ்தானுக்கான பஸ் போக்குவரத்து தொடர்கிறது. எனவே முதலில் பஸ் போக்குவரத்தை இந்தியா நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திரும்பப் பெற வேண்டும். பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கெஞ்சுகிறார்.
ஆனால் மத்திய அரசு இலங்கை தமிழர்களை காக்க இதுவரை ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மலர்ந்துள்ளது. ஆனால் இந்த கட்சிகளுக்கிடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமர் பாலத்தை உடைத்தாவது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுகின்றன. இதுபோன்ற கருத்துகளுக்கு ஜெயலலிதா எதிரானவர். இப்படிப்பட்ட கம்யூனிஸ்டு கட்சிகளுடன்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்துள்ளார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் தங்களை ஆதரிக்கும்படி எந்த கட்சியாவது கேட்டுக்கொண்டால், இது குறித்து மாநில தலைமை முடிவு செய்யும். தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தமிழக தேர்தல் குழு மத்திய கமிட்டிக்கு பரிந்துரை செய்யும்.
அத்வானியை பிரதமராக ஏற்றுக்கொண்டு விஜயகாந்த், சரத்குமார் என்று யார் வந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார் பிரசாத்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications