சத்தியமூர்த்தி பவன்: சுப.வீ பேச்சு-திமுக கண்டனம்
சென்னை: திருமாவளவன் உத்தரவிட்டிருந்தால், சத்தியமூர்த்தி பவன் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும் என்று, பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் அப்படி பேசவில்லை என்று வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 20ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காங்கிரஸ் தொண்டர்களையும் தாக்கினர்.
இதையடுத்து நடந்த விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் சுப.வீரபாண்டியன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செய்திகள் வந்தன.
இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், "சத்தியமூர்த்தி பவனை விடுதலை சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதாக காங்கிரசார் கூறுகின்றனர். உண்மையிலேயே திருமாவளவன் உத்தரவிட்டிருந்தால், சத்தியமூர்த்தி பவன் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்'' என்று பேசியதாக செய்திகள் வந்துள்ளன.
எந்தவொரு பேச்சாளரும் தேர்தல் கமிஷனரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அலுவலக கட்டிடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்வதோ, தகர்ப்போம் என்று பேசுவதோ, ஒரு ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
சுப.வீரபாண்டியனின் பேச்சு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. சுப.வீரபாண்டியனின் இந்த பேச்சை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
அப்படி பேசவே இல்லை-சுப.வீரபாண்டியன்:
ஆனால், இதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நான் ஆற்றிய உரையை ஒரு நாளேடு உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனை நான் இடிக்கச் சொன்னதாகவும், தைரியம் இருந்தால் நாள், நேரம் குறித்து அதனை இடிக்க வரும்படியும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஒருநாளும் சத்தியமூர்த்தி பவனை இடிக்கச் சொல்லியிருக்க மாட்டார், அவர் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அக்கட்டிடத்திற்கு ஒரு ஊறும் இதுவரை ஏற்படவில்லை என்பதே அதற்கு சாட்சி என்றுதான் நான் பேசினேன். அடுத்த கட்சியின் அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் உள்நுழைவதே அநாகரிகம் என்று கருதுபவன் நான்.
என்றைக்கும் மதவாத சக்திகளிடம் நாடு சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற திராவிட இயக்க சிந்தனை உடையவன் நான். ஈழத் தமிழர்களுக்கு ஏற்ற ஆதரவு குரலை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை என்பதே என் ஆதங்கம்.
எனவே தங்கபாலுவும், காங்கிரஸ் கட்சியினரும் என் மீது வருத்தம் கொள்ள தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வீரபாண்டியன்.
சத்தியமூர்த்தி பவனில் சிபிசிஐடி விசாரணை:
இதற்கிடையே சத்தியமூர்த்தி பவனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து அண்ணாசாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து மத்திய அமைச்சர் வயலார் ரவி முதல்வரை சந்தித்ததையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து கூடுதல் துணை எஸ்பி முகமது ஷாஜகான் தலைமையில் 9 பேர் கொண்ட சிபிசிஐடி குழு நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அருகில் ஒட்டப்பட்டிருந்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் போஸ்டர்களையும் புகைப்படம் எடுத்தனர்.
சத்தியமூர்த்தி பவனில் சம்பவத்தை நேரில் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரணை நடத்தினர்.
-
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications