''கிரீமிலேயரால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்''
சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை' நீக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்தப் போராட்டத்தையடுத்து இவர்கள் கைதாகினர். முன்னதாக நிருபர்களிடம் பேசிய வீரமணி,
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சமூக நீதி அண்மைகாலமாக மீறப்பட்டு வருகிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை உயர் ஜாதியினரை கொண்டு நிரப்புவதற்காக பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பிற்படுத்தப்பட்ட விவசாயிகள், வணிகர்கள் குடும்பத்தினர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வருமானம் ஆண்டிற்காண்டு மாறுபடுவதால் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பொருளாதாரம் நிலையாக இல்லை.
இதனால் ஓராண்டில் இவர்கள் கிரீமிலேயரின் கீழ் வந்துவிட்டால் அடுத்த ஆண்டில் வருமானம் குறைந்தாலும் அதே கிரீமிலேயர் அளவுகோலில் வைக்கப்பட்டு இட ஒதுக்கீட்டை இழக்கின்றனர்.
இதனால் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை உடனடியாக நீக்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு பிரதமருக்கும், சட்டத்துறைக்கும் கடிதம் எழுத வேண்டும்.
இந்த பொருளாதார அளவுகோலை நீக்கக் கோரி இன்னும் சில மாதங்களில் டெல்லியில் பிற்படுத்தப்பட்ட மக்களை கொண்டு மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications