சத்யமூர்த்தி பவன் தாக்குதல்-தங்கபாலுவிடம் விசாரணை
சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவன் மீது விடுதலை சிறுத்தைகள் நடத்திய தாக்குதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்-விடுதலைச் சிறுத்தைகள் இடையே மோதல் நடந்து வருகிறது.
கடந்த 20ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சத்தியமூர்த்தி பவன் மீது நடத்திய தாக்குதலில் அந்த அலுவலக ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களாக சத்தியமூர்த்தி பவனில் நேரில் விசாரணை நடத்திய சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முகமது ஷாஜகான், தங்கபாலுவிடமும் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஈழ மாநாட்டில் பேசிய சுப.வீரப்பாண்டியன், காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய டேப் என்னிடம் உள்ளது.
ஆனால், தான் தவறாகப் பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேடையில் அவர் என்ன பேசினார் என்பது பற்றி பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி உறவு வைத்துக் கொள்ளாது. இதைத் தான் எங்கள் கட்சியின் தமிழக பொறுப்பாளர் வயலார் ரவியும், செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லியும் கூறி வருகிறார்கள்.
இதற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முடிச்சு போட முடியாது. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
திருமங்கலம் தொகுதியில் ஜனவரி 5ம் தேதி முதல் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன். அங்கு தேர்தலை சீர்குலைக்க வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications