2 குழந்தைகளை கொன்று மனநலம் பாதித்த பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மன நலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 2 குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மூன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தை சேர்ந்தவர் முருகேஷ். மினி லாரி டிரைவர். இவரது மனைவி ஜீலியாட். இவர்களுக்கு சஞ்சய் குமார், சச்சின் என்ற இரண்டு மகன்கள். ஜீலியட் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் திடீரென கண் விழித்த ஜீலியட் மண்ணெண்ணெயை குழந்தைகள் மீது ஊற்றிவிட்டு பின்னர் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முருகேஷ், குழந்தைகள் மற்றும் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து மூவரும் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மூவரையும் காப்பாற்ற முயன்றார்.

இதில் அவர் மீதும் தீப்பிடித்தது. சம்பவத்தில் ஜூலியட் மற்றும் சச்சின் இருவரும் கருகி இறந்தனர்.

படுகாயமடைந்த முருகேஷ், சஞ்சய் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி காலை சஞ்சய் இறந்தான். முருகேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூன்னிர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+