விமான கட்டணங்கள் அதிரடி குறைப்பு-ஏர் இந்தியா 82% வரை குறைப்பு!

இந்தப் புதிய விகிதங்களின்படி இனி சென்னை- பெங்களூருக்கு ரூ.1,100 ஆக இருந்த அடிப்படை விமானக் கட்டணம் ரூ.200 மட்டுமே (எரிபொருள் கட்டணம், சர் சார்ஜஸ் தனி!!). அதேபோல சென்னை-ஹைதராபாத் மார்க்கத்தில் ரூ.400 மட்டுமே.
டெல்லி- மும்பை மார்க்கத்தில் இதுவரை ரூ.3,700 ஆக இருந்த அடிப்படைக் கட்டணம் இப்போது ரூ. 1,675 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி-சென்னை மார்க்கத்தில் ரூ.3700 ஆக இருந்த அடிப்படைக் கட்டணம் இப்போது ரூ.2300 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜெட்- கிங்பிஷ்ஷருக்கு பதிலடி!:
முன்னதாக ஜெட் நிறுவனம் தனது ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் விமானங்களில் கட்டணக் குறைப்பை அறிவித்தது. அடிப்படை கட்டணத்தில் 40 சதவீதம் வரை குறைத்துள்ளது இந்நிறுவனம். அதுமட்டுமல்ல, இந்த கட்டணக் குறைப்பை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
கட்டணக் குறைப்பு விஷயத்தில் இதுவரை பிடிகொடுக்காமல் இருந்து வந்த கிங்ஃபிஷர் நிறுவனமும் கட்டணத்தைக் குறைக்கிறது. அதன் துணை நிறுவனமான கிங் பிஷ்ஷர் ரெட் (முன்னாள் ஏர் டெக்கன்) கட்டணங்களும் குறைக்கப்படுகின்றன.
புதிய கட்டணக் குறைப்பு விகிதங்களை ஜனவரி 1ம் தேதி அறிவித்து, உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் கட்டணக் குறைப்பையடுத்தே ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான கட்டணங்களை அதிரடியாகக் குறைத்துள்ளது.
இவை தவிர குறைந்த கட்டண சேவை விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ ஆகியவையும் கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
கடந்த நான்கு மாதங்களாக விமான எரிபொருள் விலை மிகவும் குறைந்து வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சில விமான சேவை நிறுவனங்கள் ஒரு பயணச் சீட்டுக்கான கட்டணத்தில், விமான எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை ரூ.200 முதல் ரூ.400 வரை குறைத்தன. அதே சமயம் இந்த நிறுவனங்கள் அடிப்படைக் கட்டணத்தில் மாறுதல் எதுவும் செய்யவில்லை.
எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விமான எரிபொருள் விலையை ஏழு முறை குறைத்துள்ளன. இம்மாத தொடக்கத்தில் இதன் விலை மேலும் ரூ.4,208 குறைக்கப்பட்ட பின்னர், தற்போது புதுடெல்லியில் 1,000 லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.32,691.28க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைக்குறைப்பின் பலன் பயணிகளையும் சேர வேண்டும் என மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்தே இப்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது அடிப்படைக் கட்டணக் குறைப்பு மட்டுமே.
விமான எரிபொருள் மற்றும் சர் சார்ஜ் குறைக்கப்பட்டால்தான் டிக்கெட் விலை உண்மையில் குறையும். விரைவில் அதற்கான முயற்சியும் எடுக்கப்படும் என்றும், பிப்ரவரி இறுதிக்குள் எரிபொருளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் 30 சதவிகிதம் வரை குறைக்க அறிவுறுத்தப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications