ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு லஷ்கர் குறி: யு.எஸ்

அமெரிக்க தொழில்நுட்ப உளவுத்துறை இந்த எச்சரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. விமானம் மூலம் வந்து விராட்தைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராம்.
விமானம் தாங்கி போர்க்கப்பலான விராட் தற்போது கொச்சியில் பராமரிப்புக்காக வந்துள்ளது. கப்பல் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர் அமைப்பின் இணையதள செயல்பாடுகளை கண்காணித்ததில், இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விராட் கப்பலுக்கு அருகில் எந்தக் கப்பலும் நெருங்கக் கூட முடியாது என்று கொச்சியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட் மர்கம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 23ம் தேதி இரவு எனக்கு டிவி செய்திகள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து விராட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விராட் கப்பலுக்கு 150 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை எந்தக் கப்பலும் நெருங்க முடியாது என்றார்.
விராட் போர்க் கப்பல் உள்ள பகுதியில் கடற்படை, கடோலரக் காவல் படை, மத்திய தொழில பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் உள்ள ஒரே விமானம் தாங்கிக் கப்பல் விராட் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்க்காலத்தில் ஒரே நேரத்தில் 18 போர் விமானங்களை விராட்டிலிருந்து செலுத்த முடியும். தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவான, சக்தி வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக விராட் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications