புத்தாண்டு கொண்டாட்டம்.. வரம்பு மீறினால்...: கமிஷனர் எச்சரிக்கை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் இரவு ஒரு மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, சாலைகளில் பெண்களிடம் கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவு 10 மணி முதல் 5,000 நகரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.
குடித்துவிட்டு யாரும் வாகனங்களை ஓட்டக் கூடாது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் பெண்களிடம் கிண்டல் செய்வது போன்ற எந்த வரம்பு மீறிய செயலிலும் யாரும் ஈடுபடக் கூடாது.
நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்வார்கள்.
நட்சத்திர ஹோட்டல்களில் ஆபாச நடனங்கள் நடத்தக்கூடாது.
இதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நீடிக்கக் கூடாது அதற்குள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு தத்தம் வீடுகளுக்கு திரும்பிவிட வேண்டும்.
சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்றார் ராதாகிருஷ்ணன்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications