ஜெ. 4 நாள் பிரசாரம் - விஜயகாந்த் நாளை பிரசாரம்
சென்னை: திருமங்கலம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து நான்கு நாட்களுக்கு ஜெயலலிதா அங்கு பிரசாரம் செய்கிறார். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து நாளை தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் விஜயகாந்த்.
ஜனவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முதல் நாளான 3ம் தேதியன்று பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார் பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி உள்ளிட்ட 17 இடங்களில் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.
மறுநாள் 4-ம் தேதி புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ உரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல் உரப்பனூர் உள்ளிட்ட 12 இடங்களில் ஜெயலலிதா பேசுகிறார்.
5-ம் தேதி சிவரக் கோட்டை, அகத்தாப்பட்டி, வாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, மேலப்பட்டி உள்ளிட்ட 12 இடங்களில் பேசிவிட்டு இறுதியாக வேப்பங்குளம், இலுப்பங்குளம் ஆகிய இடங்களில் பேசி தன்னுடைய சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
பின்னர் 6-ம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச உள்ளார்.
இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
நாளை விஜயகாந்த் ..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
ஜனவரி 1ம் தேதியான நாளை, காலை 11 மணிக்கு பெருங்குடியில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் விஜயகாந்த். வளையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, வலையபட்டி, கொம்பாடி, ஆலங்குளம், நிலையூர் ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி பேசி பிரசாரம் செய்கிறார்.
பின்னர் இரவு 7 மணிக்கு கைத்தறி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
தீவிரப் பிரசாரத்தில் சரத்குமார் ...
ஏற்கனவே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் வரவுள்ளதால், திருமங்கலம் தேர்தல் பிரசார களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications