கள்ளக் காதலியுடன் தகராறு-சிறுவன் பலி
சென்னை: சென்னை அருகே கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரது 5 வயது மகனைக் கொடூரமாகக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தைச் சேர்ந்தவர் கல்பனா (25). இவரது கணவர் மூர்த்தி (30). இவர்களது குழந்தைகள் ரம்யா (9), வசந்தகுமார் (5).
இந் நிலையில் கல்பனாவுக்கும், நாராயணன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. 9 மாதங்களுக்கு முன்பு கல்பனா தனது கணவர் மூர்த்தியை விட்டு பிரிந்து நாராயணனுடன் சேர்ந்து குடித்தனம் நடத்தத் தொடங்கினார். 2 குழந்தைகளும் கல்பனாவுடன் வசித்தனர்.
இந் நிலையில் நேற்று மூர்த்திக்கு அவரது மகன் வசந்தகுமார் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய அவர் தனது உறவினர்களுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவனை நாராயணன் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
நேற்று கல்பனாவுக்கும், அவரது நாராயணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம், அப்போது வசந்தகுமாரை நாராயணன் கண்மூடித்தனமாக அடித்ததுள்ளார். கொடூரமாக அடித்ததில் மயங்கி விழுந்த சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயரிழந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications