கஸாப் பாகிஸ்தானியாக இருக்கலாம், ஆனால் ஆதாரம் இல்லையே: பாக். பாதுகாப்பு ஆலோசகர்
இஸ்லாமாபாத்: மும்பையில் பிடிபட்டுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப், பாகிஸ்தான் குடிமகன் இல்லை என்று ஒரேயடியாக மறுத்து விட முடியாது என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹமூத் அலி துரானி கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பே இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை விட உச்சமாக, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள தீவிரவாதி கஸாப், பாகிஸ்தான் நாட்டவனே அல்ல என்றும் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கஸாப் பாகிஸ்தானியாக இருக்கக் கூடும் என்று அந்த நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் துரானி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இருக்கலாம். இல்லை என்று நான் ஒரேயடியாக மறுக்கவில்லை. ஆனால் எங்களிடம் ஆதாரம் இல்லை.
இந்த நிமிடம் வரை மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்தான் என்று கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியா முதலில் விசாரணையை நடத்தி முடிக்கட்டும்.
கஸாப் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதை அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதில் அனுப்புவது குறித்தும் பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவைப் போலவே தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். அதை யாரும் மறந்து விடக் கூடாது.
இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறது பாகிஸ்தான். இரு நாடுகளும் தங்களுக்குள் நிலவும் அவ நம்பிக்கையை பின்னால் போட்டு விட்டு தீவிரவாதத்தை எதிர்த்து இணைந்து போராட முன்வர வேண்டும்.
இரு நாடுகளும் அமைதியாக வாழ நட்புறவும், தோழமையும் அவசியம். இது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கே நல்லது என்றார் துரானி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications